தலமையகம் செய்திகள் புகைப்படங்கள் அழைப்பு கட்டுரைகள் கருவூலம் home Home
PIB Delhi Releases Photos Invitations Features Archives
Search உயர்நிலை தேடல்
RSS RSS
Quick Search
home Home
Releases Photos Invitations Features Accreditation Feedback Subscribe Releases Advance Search
                         
  home  Printer friendly Page home  Email this page
 
Special Service

பெண்களுக்கு கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு

புது தில்லி, ஆகஸ்ட் 13, 2014

The National Council for Science & Technology Communication (NCSTC) is mandated to communicate science & technology (S&T) to masses, stimulate scientific and technological temper and coordinate & orchestrate such efforts throughout the country

 
 * அ.ர. வித்யா

நெடுங்காலமாக பாலின விகிதத்தின் வீழ்ச்சி என்பது நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்த விகிதம் எப்போதுமே பெண்களுக்கு சாதகமாக அமையவில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பெண்கள், ஆண்கள் விகிதம் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் என்று இருந்தது (1901 மக்கள் கணக்கெடுப்பு). கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிலையில் சிறிய முன்னேற்றம் உள்ளது. 1991-ல் 1000 ஆண்களுக்கு வெறும் 927 பெண்களே இருந்தனர். இது 2001-ல் 933 ஆக உயர்ந்தது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த எண்ணிக்கை 943 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பிரச்சனைக்கு, ஆரம்ப காலத்திலிருந்தே நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு புரிந்துக் கொண்டது. இது தொடர்பாக மத்திய நிதி துறை அமைச்சர் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, வர்த்தகப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்தாலும், பெண் குழந்தைகள் நலன் குறித்து அமைதியாகவே இருப்பது அவமானமாகவே உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

Ôபெண்களுக்குக் கல்வி, பெண்களுக்குப் பாதுகாப்புÕ என்ற திட்டத்திற்கு இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. சமுதாயத்தில் உள்ள, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த சமநிலையின்மையை சரிசெய்வதற்கான நடவடிக்கை இது. பெண்களுக்கான சேவைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சேவைத் திறனை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பெண் குழந்தை மற்றும் பெண்கள் நலன் குறித்து நாட்டு மக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தொளிகள் நடத்தப்படும். இந்த விழிப்புணர்வு ஆரம்பக் காலத்திலேயே கொண்டு வரவேண்டும் என்பதற்காக பள்ளி பாட திட்டத்தில் பால்நிலை குறித்த அத்தியாயம் சேர்க்கப்பட வேண்டும்.

பொது சாலை போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முதற்கட்ட சோதனைக்காக ரூ. 50 கோடி செலவிட உள்ளது. அதே போல பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த திட்டத்திற்காக ரூ. 150 கோடி செலவிட உள்ளது. தில்லியின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நெருக்கடி / பிரச்சனை மேலாண்மை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி நிருபையா நிதியில் இருந்து வழங்கப்படும்.

                                                                                                                      ******
* உதவி தகவல் அலுவலர்
பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.


                                                          
                                                      
 

 

 

 
Web Ratana This site is winner of Platinum Icon for 'Outstanding Web Content' Web Ratna Award'09 presented in April 2010

கருத்தும் ஆக்கமும்: கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.
சாஸ்திரி பவன் (தரை தளம்), ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 006. Phone 044-28228146/47/48,28256474
Go Top Top

விதிமுறைகள் Copyright கொள்கை தனி கொள்கை Hyperlinking கொள்கை Terms of Use Copyright Policy Privacy Policy Hyperlinking Policy