தலமையகம் செய்திகள் புகைப்படங்கள் அழைப்பு கட்டுரைகள் கருவூலம் home Home
PIB Delhi Releases Photos Invitations Features Archives
Search உயர்நிலை தேடல்
RSS RSS
Quick Search
home Home
Releases Photos Invitations Features Accreditation Feedback Subscribe Releases Advance Search
                         
  home  Printer friendly Page home  Email this page
 
Special Service


   புகையிலையைப் பகைப்போம்
உலக புகையிலை இல்லா தினம் அனுசரிப்போம்

 

 

The National Council for Science & Technology Communication (NCSTC) is mandated to communicate science & technology (S&T) to masses, stimulate scientific and technological temper and coordinate & orchestrate such efforts throughout the country

 

      
                         


                           
* அ.ர. வித்யா

உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் மக்கள் புகையிலை பழக்கத்தால் உயிர் இழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் 1987ம் ஆண்டு மே 31ம் தேதியை உலக புகையிலை இல்லா தினமாக அறிவித்தது.

புற்று நோயை உண்டாக்கும் புகையிலை பழக்கத்தை குறைப்பதே உலக புகையிலை இல்லா தினம் அனுசரிப்பதின் நோக்கமாகும். புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பழக்கத்தை குறைப்பதே இந்த தினம் அனுசரிப்பதின் முதன்மை நோக்கமாகும். இந்த நோக்கத்தை மேலும் சிறப்பான முறையில் கொண்டு சேர்க்க உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பினை தேர்வு செய்கிறது. " புகையிலை மீதான வரியை உயர்த்துவோம்" என்பதே இந்த ஆண்டின் நாட்டின் தலைப்பு பல்வேறு பகுதிகளை சார்ந்த தனி நபர்களும், சுகாதார நிறுவனங்களும் புகையிலைக்கு எதிரான கருத்தொளிகளில் பங்கேற்று வருகின்றனர்.

ஊடகக் கருத்தொளிகள், வரைகலை, எச்சரிக்கைகள் மற்றும் புகையிலைக்கு பதிலாக வேறு பயிர்கள் வளர்ப்பதன் மூலம் புகையிலை சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முடியும்.

நிக்கோட்டின் பழக்கத்திற்கு அடிமையாவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சிகரட், பீடி, புகையிலைபசை, குட்கா, மெல்லக்குடிய புகையிலை போன்ற பல்வேறு வடிவங்களில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது. அதைத்தவிர புகையிலை பயன்பாட்டால் சரிசெய்ய முடியாத மூளை நோயையும் மற்ற பேதைப் பொருட்களைப் போல் புகையிலையும் மூளையின் செயல்பாட்டை சீர் குலைக்கிறது. உணவு உட்கொள்ளுதல் மற்றும் தண்ணீர் அருந்துவது போல் நிக்கோட்டினும் உடலுக்கு ஒரு அத்தியாவசிய தேவை என்ற தவறான தகவலை மூளைக்கு அனுப்புகிறது. புகையிலை பழக்கத்தினால் க்ரானிக் அப்ஸ்ரக்டிவ் பல்ம்னரி டிசிஸ் (இருதய நோய்) நுரையீரல் புற்று நோய், மாரடைப்பு, வாதம் போன்ற பல்வேறு இருதய மற்றும் புற்று நோய் உண்டாகும்.

உலக அளவில் புகையிலை பயன்படுத்வோரின் எண்ணிக்கை 130 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பத்துபேரில் ஒருவர் புகையிலை பழக்கத்தால் உயிர் இழக்கிறார்.

உலக அளவிலான வயதுவந்தோர் புகையிலை கணக்கெடுப்பு (குளோபல் அடல்ட் டுபேக்கோ சர்வே) இந்தியா 2010ன் படி புகையிலை பழக்கமே தவிர்க்கக்கூடிய மரணத்தின் காரணமாக இருக்கிறது. உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் 55 லட்சம் மக்கள் புகையிலை பழக்கத்தினால் தங்களது உயிரை இழக்கின்றனர். இதில் இந்தியாவில் மட்டுமே ஐந்து பேரில் ஒருவர் உயிர் இழக்கின்றார் என்று இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் "இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களால் ஏற்படும் பொருளாதார சுமை" குறித்த அறிக்கையும் மற்றும் இந்திய புகையிலை கட்டுப்பாட்டு தூதரான கிரிகெட் வீரர் திரு. ராகுல் திராவிட் இடம் பெற்றுள்ள பத்திரிகை விளம்பரத்தை வெளியிட்டார்.



"இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களால் ஏற்படும் பொருளாதார சுமை" குறித்த அறிக்கையை இந்திய பொது சுகாதார நிறுவனம், மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்தியாவுக்கான உலக சுகாதாரத்துக்கான அலுவலகத்தின் ஆதரவுடன் தயாரித்துள்ளது. புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் நோய்களால் உண்டாகும் நேரடி மற்றும் மறைமுக செலவுகளை இந்த அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது. குறிப்பாக நுரையீரல் நோய்கள், காச நோய், இதய நோய் மற்றும் புற்று நோய் ஆகிய நான்கு முக்கிய நோய்காளல் ஏற்படும் விளைவுகளை இந்த அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது.

இந்தியாவில் 2014ம் ஆண்டு புகையிலை பயன்பாட்டால் உண்டான நோய்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை ஏறக்குறைய ரூ.1,04,500 கோடி என்று மதிப்பீடு செய்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.16 சதவீதமாகும். மேலும், புகையிலையினால் உண்டான நோய்களுக்கு நேரடியாக செலவிடப்பட்ட மருந்துகளுக்கான மொத்த செலவு மட்டுமே ரூ. 16,800 கோடி என்றும், மறைமுகமான செலவு ரூ.14,700 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்துவிடுவதால் ஏற்பட்ட செலவு ரூ.73,000 கோடியாகும். இதனால் நாட்டின் உற்பத்தியில் குறிப்பிட்ட அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மறுவாழ்வு மையங்கள் அமைப்பதன் மூலம் புகையிலை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க முடியும். அதைத்தவிர்த்து ஒரு சுகாதாரமான சமுதாயத்தையும், புகையிலை பழக்கம் இல்லாத நல்ல வாழ்க்கையும் பெறுவது ஒவ்வொரு தனிமனித கடமையாகும். புகையிலை பழக்கத்திற்கு அதிகமாக அடிமையாவது இளைஞர்கள் தான். இதை குறைப்பதற்கு தீவிரமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கருத்தொளிகளுமே சிறந்த வழியாகும்.

                                                                                                                          ******
தகவல் உதவி அலுவலர்,
பத்திரிகை தகவல் அலுவலகம்
தேன்/அரவி/லீமா
சென்னை/க-02 (30/05/2014)












 

 

 

 
Web Ratana This site is winner of Platinum Icon for 'Outstanding Web Content' Web Ratna Award'09 presented in April 2010

கருத்தும் ஆக்கமும்: கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.
சாஸ்திரி பவன் (தரை தளம்), ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 006. Phone 044-28228146/47/48,28256474
Go Top Top

விதிமுறைகள் Copyright கொள்கை தனி கொள்கை Hyperlinking கொள்கை Terms of Use Copyright Policy Privacy Policy Hyperlinking Policy