தலமையகம் செய்திகள் புகைப்படங்கள் அழைப்பு கட்டுரைகள் கருவூலம் home Home
PIB Delhi Releases Photos Invitations Features Archives
Search உயர்நிலை தேடல்
RSS RSS
Quick Search
home Home
Releases Photos Invitations Features Accreditation Feedback Subscribe Releases Advance Search
                         
  home  Printer friendly Page home  Email this page
 
Special Service


   பாரதப் பிரதமர்கள்
 

சென்னை, மே 12, 2014

The National Council for Science & Technology Communication (NCSTC) is mandated to communicate science & technology (S&T) to masses, stimulate scientific and technological temper and coordinate & orchestrate such efforts throughout the country

 

      
       
             

புகைப்படக் கட்டுரை

 

 

எஸ். பாலகிருஷ்ணன்*
இந்தியாவின் 16வது பிரதமராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பது வரும் மே 16ம் தேதி அன்று 16வது மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்போது தெரியக்கூடும். இதுவரை மொத்தம் 17 பேர் இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரித்துள்ளனர். இருமுறை இடைக்காலப் பிரதமராகப் பதவி வகித்த திரு. குல்சாரி லால் நந்தா உள்பட அனைவரது விவரங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானோர் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1947ம் ஆண்டு ஆகஸ்டு 14-15 அன்று ÔÔவிதியுடன் ஒரு ஒப்பந்தம்ÕÕ என்ற தனது புகழ் பெற்ற உரையுடன் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது பாரதப் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவிலிருந்து தற்சமயம் பிரதமராக பதவி வகித்துவரும் டாக்டர் மன்மோகன் சிங் வரை இந்தியாவின் பிரதமர்கள் பற்றிய விவரம் இதோ:
 

பண்டித ஜவகர்லால் நேரு

 

Prime Minister

 

 

15 ஆகஸ்டு 1947 - 27 மே 1964. காங்கிரஸ்

தெடர்ந்து 17 ஆண்டுகள் - சரியாகச் சொல்வதெனில் 6,131 நாட்கள் - பதவி வகித்த பண்டித ஜவகர்லால் நேருவின் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.

பிறப்பு: நவம்பர் 14 1889, அலகாபாத், உ.பி.
மறைவு: மே 27 1964, (75வது வயதில் )

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், அணிசேரா அமைப்பை இணைந்து உருவாக்கியவர்.

1955ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

1947ல் பதவி ஏற்றுக்கொண்ட போதிலும் முதலாவது மக்களவைத் தேர்தல் 1952ல் தான் நடைபெற்றது. மக்களவை ஏப்ரல் 17ம் தேதி அமைக்கப்பட்டு முதன்முறையாக அவ்வாண்டு மே 13ம் தேதி அன்று கூடியது. இரண்டாவது மற்றும் மூன்றாவது மக்களவைகள் முறையே ஏப்ரல் 1957லும் ஏப்ரல் 1962லும் அமைக்கப்பட்டன.
 

 

திரு. குல்சாரி லால் நந்தா

 

 

Prime Minister

 

 

மே 27 1964 - ஜூன் 9 1964. காங்கிரஸ்

 

இரண்டு முறை இடைக்காலப் பிரதமராகப் பதவி வகித்தார். முதலாவதாக நேருவின் மறைவிற்குப் பிறகு 14 நாட்களும், மீண்டும் லால் பகதூர் சாஸ்திரியின் மறைவிற்குப் பிறகு மறுபடியும் 14 இடைக்காலப் நாட்களுக்கும் பிரதமராகப் பதவி வகித்தார்.

பிறப்பு: ஜூலை 4, 1898; தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாவட்டத்தின் சியால்கோட்.

மறைவு: ஜனவரி 15, 1998. 100 வயதை எட்டுவதற்குச் சில மாதங்கள் முன்பாக

பேராசிரியராக இருந்து தொழிற்சங்கவாதியாக மாறி, பின்னர் அரசியல்வாதியாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் பரிமளித்தார். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய அவர் பின்னர் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

பம்பாய் அரசாங்கத்தில் (1946-1950) தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். மத்திய அரசாங்கத்தில் தொழிலாளர் நலன்-வேலை வாய்ப்பு, உள்துறை, திட்டமிடல் ஆகிய துறைகளின் அமைச்சராகவும், திட்டக்குழுவின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார்.

சிறந்த காந்தியவாதியான நந்தாவிற்கு 1997ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 

 

திரு. லால் பகதூர் சாஸ்திரி

Prime Minister

 

 

ஜூன் 9 1964 - ஜனவரி 11 1966 காங்கிரஸ்

 

மூர்த்தி சிறியதாகினும் கீர்த்தி பெரிது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் லால் பகதூர் சாஸ்திரி.

1965ல் நிகழ்ந்த பாகிஸ்தானுடனான போரில் வெற்றியும், அவர் உருவாக்கிய Ôஜெய் ஜவான் ஜெய் கிஸான்Õ முழக்கமும் அவர் புகழை இன்றும் நினைவுறுத்துகின்றன.

பிறப்பு: அக்டோபர் 2, 1904 (காந்தி பிறந்த அதே தேதி) முகல்சாராய் (வாரணாசி, உ.பி. மாநிலம்)

மறைவு: தாஷ்கண்ட் நகரில் (அன்றைய சோவியத் யூனியன்) ஜனவரி 11, 1966. அச்சமயம் அவர் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் உடன் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

நேருவின் திடீர் மறைவிற்குப் பிறகு பதவிக்கு வந்த போதிலும் தனது எளிமையாலும் உறுதியான நடவடிக்கைகளாலும் மக்கள் மனதை வசீகரித்து 582 நாட்கள் பதவி வகித்தார்.

இவரது மறைவிற்குப் பிறகு 1966ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


 

 

திரு. குல்சாரி லால் நந்தா


ஜனவரி 11 - 24 1966, காங்கிரஸ்
 

 

 

மீண்டும் இரண்டாவது முறையாக இடைக்கால பிரதமராக 14 நாட்களுக்குப் பதவி வகித்தார்.

 

திருமதி இந்திரா காந்தி

 

Prime Minister

 

ஜனவரி 24 1966 - மார்ச் 24 1977, காங்கிரஸ்

 

இதுவரை இப்பதவியை வகித்த ஒரே பெண்மணி. தனது தந்தைக்கு அடுத்ததாக நீண்ட நாட்கள் இப்பதவியை வகித்தவர் என்ற பெருமையும் உண்டு. தனது தந்தையைவிட 300 நாட்கள் குறைவு. நேருவைப் போன்று தொடர்ந்து இல்லாமல் இடையில் பதவி இழந்து, மீண்டும் பிரதமரானவர்.

பிறப்பு: நவம்பர் 19 1917 (அலகாபாத், உத்திரப்பிரதேசம்)

மறைவு: அக்டோபர் 31 1984, தனது 67வது பிறந்த தினத்திற்குச் சில நாட்கள் முன்பாக தனது மெய்க்காப்பாளர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

வங்காள தேசத்தின் விடுதலைக்கு உதவியது, வங்கிகள் தேசிய மயமாக்கல், இந்தியாவின் முதலாவது அணுகுண்டு சோதனை (பொக்ரான்-1974), முன்னாள் சமஸ்தானங்களுக்கு மானிய உதவியை நிறுத்தியது ஆகியவற்றை இவரது சாதனைகளாகக் குறிப்பிடலாம்.

1971ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

நான்காவது மக்களவை 1967 மார்ச்சிலும், ஐந்தாவது மக்களவை 1971 மார்ச்சிலும் அமைக்கப்பட்டன. 

 

திரு. மொரார்ஜி ரன்சோட்ஜி தேசாய்

 

Prime Minister

 

 

மார்ச் 27 1977 - ஜூலை 28 1979 - ஜனதாக் கட்சி

 

 

காங்கிரஸ் கட்சியை சாராத முதலாவது பிரதமர். ஆட்சிக்காலம் 857 நாட்கள்.

பிறப்பு: பிப்ரவரி 29, 1896 (குஜராத் மாநிலத்தில் உள்ள புல்சார் மாவட்டத்தில் உள்ள பஹ்தேலி கிராமம்)

மறைவு: ஏப்ரல் 10, 1995, நூறு வயதை எட்டுவதற்குச் சற்றுக் குறைவாக.

தீவிர காந்தியவாதியான இவர் தளராதக் கொள்கைப் பிடிப்பு கொண்டவர்.

அந்நாளைய பம்பாய் மாநிலத்தில் (மராட்டியமும் குஜராத்தும் இணைந்திருந்த பகுதி) முதல்வராக 1952ல் இருந்து நான்காண்டு காலம்

1991ல் பாரத ரத்னா விருது வழங்கப்பபட்டது.

ஆறாவது மக்களவை மார்ச் 1977ல் அமைந்தது.
 

 

திரு சரண் சிங்

 

Prime Minister

 

ஜூலை 28 1979 - ஜனவரி 14 1980, ஜனதாக் கட்சி

 

 

171 நாட்களுக்குப் பதவி வகித்த இவர் ஒரு நாளும் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பு: டிசம்பர் 23, 1902 (மீரட் மாவட்டம், உ.பி.)

மறைவு: மே 29, 1987

பதவியேற்றச் சில நாட்களுக்குள்ளாகவே கூட்டணிக் கட்சி ஒன்று தனது ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டதால் அடுத்த தேர்தல் வரை அந்த பொறுப்பை வகித்து வந்தார்.

1967, 1970 என இரண்டு காலக்கட்டங்களில் உ.பி. மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார்.
 

 

திருமதி இந்திரா காந்தி

Prime Minister

ஜனவரி 14 1980 - அக்டோபர் 31 1984, காங்கிரஸ் (இந்திரா)

 

 

 

 

 மீண்டும் இரண்டாவது முறையாக, அவரது மறைவு வரை.

ஏழாவது மக்களவை ஜனவரி 1980ல் அமைக்கப்பட்டது.
 

 

திரு. ராஜீவ் காந்தி 

Prime Minister

 

 

அக்டோபர் 31 1984 - டிசம்பர் 2 1989, காங்கிரஸ் (இ)

 

இந்நாள் வரை இப்பதவியை வகித்த மிக இளம் வயதினர். 40வது வயதில், தனது அன்னை இறந்த அதே நாளில், நேருவின் பேரனான இவர் பிரதமார் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பிறப்பு: ஆகஸ்டு 20 1944 (இன்றைய மும்பையில்)

மறைவு: மே 21 1991ல் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.

பதவியேற்றச் சில மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சாதனை அளவாக 404 தொகுதிகளை வென்ற இவர், 1989 டிசம்பரில் நடைபெற்ற 9வது பொதுத் தேர்தலில் பதவியை இழந்தார்.

அவரது மறைவிற்குப் பிறகு 1991ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எட்டாவது மக்களவை டிசம்பர் 1984ல் அமைக்கப்பட்டது.
 

 

திரு. விஸ்வநாத் பிரதாப் சிங்

 

 

Prime Minister

 

டிசம்பர் 2 1989 - நவம்பர் 10 1990, ஜனதா தளம்

 

 

Ôமாண்டாÕவின் ராஜா என அழைக்கப்பட்ட இவர் இந்தியாவின் எட்டாவது பிரதமராகப் பதவியேற்றார். (மாண்டா அலகாபாத் அருகில் ஒரு ஜமீன் பகுதி)

பிறப்பு: ஜூன் 25, 1931 (அலகாபாத், உ.பி.)

மறைவு: நவம்பர் 27 2008

ஜனதா தள அலையில் உருவாகிய தேசிய முன்னணிக்குத் தலைமை ஏற்று 344 நாட்கள் பதவி வகித்தார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) பொதுத்துறை வேலை வாய்ப்பில் ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் மண்டல் குழுவின் முடிவை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

உ.பி. மாநிலத்தின் முதல்வராக 1982 வரை இரண்டாண்டுக் காலம் இருந்துள்ளார்.

ஒன்பதாவது மக்களவை 1989 டிசம்பரில் அமைக்கப்பட்டது.
 

 

திரு. சந்திர சேகர்

Prime Minister

நவம்பர் 10 1990 - ஜூன் 21 1991, ஜனதா தளம் (மதச்சார்பற்ற)

 

 

 

 

 இவர் 224 நாட்கள் பதவி வகித்தார்.

பிறப்பு: ஜூலை 1, 1927 (பலியா மாவட்டம், உ.பி.)

மறைவு: ஜூலை 8 2007
 

 

திரு. பி.வி. நரசிம்ம ராவ்

 

Prime Minister

 

 

ஜூன் 21 1991 - மே 16 1996, காங்கிரஸ் (இ)

 

 

தென் இந்தியாவிலிருந்து பிரதமர் பதவியை வகித்த முதலாவது நபர். நேரு குடும்பத்தைச் சாராத நபர் ஒருவர் முதன் முதலாக ஐந்தாண்டுக் காலம் முழுமையாகப் பதவி வகித்ததும் இவரே. ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் தொங்கு நாடாளுமன்றமாக இருந்த போதிலும் ஐந்தாண்டுக் காலத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ததும் ஒரு சாதனையாகும்.

பிறப்பு: ஜூன் 28 1921 (கரிம்நகர் மாவட்டம், ஆந்திரம்)

மறைவு: டிசம்பர் 23 2004

ஆந்திர மாநிலத்தின் முதல்வர்: 1971-73

பொருளாதார தாராளமயமாக்க கொள்கையை அறிமுகப்படுத்தியவர்.

பன்மொழி வித்தகர் - இந்திய மற்றும் அந்நிய மொழிகளில் புலமை பெற்றவர்.

10வது மக்களவை ஜூன் 1991ல் அமையப்பெற்றது.
 

 

திரு. அடல் பிகாரி வாஜ்பாய்

 

Prime Minister

 

16 மே - 1 ஜூன் 1996, பாரதிய ஜனதாக் கட்சி

 

 

இந்தியாவின் முதலாவது Ôபிரம்மச்சாரிÕ பிரதமர். 13 நாட்களே இவர் பிரதமர் பதவியை வகித்தார்.

பிறப்பு: டிசம்பர் 25 1924 (குவாலியர், ம.பி.)

சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கவிஞரும் கூட.

தனது சிறந்த பேச்சுத் திறமையால் பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச அரங்குகளில் நிலைநாட்டியவர்.

11வது மக்களவை மே 1996ல் அமையப்பெற்றது.
 

 

திரு. தேவ கவுடா

 

 

 

 

 

Prime Minister

 

 

ஜூன் 1 1996 - ஏப்ரல் 21 1997, ஜனதா தளம்

 

 

11வது மக்களவையின் இரண்டாவது அரசு ஹரடணஹள்ளி தொட்டே தேவ கவுடா தலைமையில் 11 மாதங்கள் நடைபெற்றது.

பிறப்பு: மே 18, 1933 (ஹரடணஹள்ளி கிராமம், ஹாசன் மாவட்டம், கர்நாடகம்)

மே 30, 1996 வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்த அவர், அடுத்த தினத்திலிருந்து பாரதப் பிரதமராகப் பதவி ஏற்றார்.

காங்கிரசும் பிஜேபியும் அல்லாத கட்சிகளும், பல்வேறு மாநிலக்கட்சிகளும் இணைந்து உருவாக்கிய மூன்றாவது அணி - ஐக்கிய முன்னணி - இவரைத் தேடிவந்து பிரதமர் பதவியை வழங்கியது.

எனினும் வெளியில் இருந்து ஆதரவு தந்த ஒரு கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப பிரதமர் பதவியிலிருந்து இவர் விலகி வேறு ஒருவருக்கு வழிவிட வேண்டியதாயிற்று.
 

 

திரு. இந்தர் குமார் குஜ்ரால்

 

Prime Minister

 

ஏப்ரல் 21 1997 - மார்ச் 19 1998, ஜனதா தளம்

 

 

11வது மக்களவையின் மூன்றாவது அரசிற்கு தலைமை ஏற்ற திரு குஜ்ரால் ஒன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார். ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்த கட்சி ஒன்று தனது ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் இவரது அரசு சிறுபான்மை அரசாக மாறியது. எனவே, 1997 நவம்பர் 28 அன்று இவர் பதவி விலகினாலும் அடுத்த தேர்தல் வரை - மார்ச் 19, 1998 - பொறுப்பில் இருந்தார்.

பிறப்பு: டிசம்பர் 4 1919 (அன்றைய ஒருங்கிணைந்த பஞ்சாப் மாவட்டத்தில் ஜீலம் நகரில், தற்போதைய பாகிஸ்தானில்)

மறைவு: 30 நவம்பர் 2012
 

 

திரு. அடல் பிகாரி வாஜ்பாய்

 

 

Prime Minister

 

மார்ச் 19 1998 - அக்டோபர் 1999, மீண்டும் அக்டோபர் 13 1999 - மே 22 2004, பா.ஜ.க.

மீண்டும் இரண்டாவது முறையாக, இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைவராக, திரு வாஜ்பாய் மார்ச் 19, 1998 அன்று பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும், பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழக்க வேண்டியதாயிற்று. கடந்த முறை 13 நாட்கள் மட்டுமே பதவி வகித்த இவர், இம்முறை 13 மாதங்கள் பதவி வகித்தார்.

எனினும், இந்தக் குறுகிய காலத்தில் இவரது சாதனைகளாக பொக்ரானில் மீண்டும் நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு சோதனைகளும், கார்கில் போரின் வெற்றியையும் குறிப்பிடலாம்.

மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு இவருக்கு அக்டோபர் 13 1999ல் கிட்டியது. இம்முறை முழுவதுமாக ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார்.

இவரது அரசியல் வாழ்க்கையில் எண் 13 முக்கியப் பங்காற்றியுள்ளதை மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் இரண்டாவது உயர் குடிமை விருதான பத்ம விபூஷன் இவருக்கு 1992ல் வழங்கப்பட்டது.

12வது மக்களவை 1998 மார்ச்சிலும், 13வது மக்களவை 1999 அக்டோபரிலும் அமையப்பெற்றன.
 

 

டாக்டர். மன் மோகன் சிங்

 

Prime Minister

 

 

22 மே 2004 -21 மே 2009, 22 மே 2009-இந்நாள்வரை. இந்திய தேசிய காங்கிரஸ்

 

 

பொருளாதார மேதையான இவர் தாம் நிதி அமைச்சராக (1991-96) இருந்தபோது பொருளாதார சீர்திருத்தக் கொள்கையை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார்.

நேருவிற்குப் பின், வெகு நீண்ட காலத்திற்குப் பிறகு, தொடர்ந்து இருமுறை முழுவதுமாக இவர்தான் பிரதமார் பதவி வகித்துள்ளார்.

பிறப்பு: 26 செப்டம்பர் 1932 (இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில்)

1991 முதல் இவர் தொடர்ந்து மேலவையின் உறுப்பினராக உள்ளார்.

14வது மக்களவை மே 2004லும், 15வது மக்களவை மே 2009லும் அமைக்கப்பட்டன.
 

 

 

 

                       

பாரதப் பிரதமர்கள் (இடைக்காலப் பிரதமர்கள் உள்பட)

18           புதிய பிரதமர் ?                       

¹Fò Hóîñ˜ ?

 

 

17           டாக்டர் மன் மோகன் சிங்      22.05.2004 - இன்று வரை                இந்திய தேசிய காங்கிரஸ்

ì£‚ì˜ ñ¡ «ñ£è¡ Cƒ

22.05.2004 - Þ¡Á õ¬ó

Þ‰Fò «îCò 裃Aóv

16           திரு. அடல் பிகாரி வாஜ்பாய்                19.03.1998 - 22.05.2004                பாரதிய ஜனதாக் கட்சி

F¼. Üì™ Hè£K õ£xð£Œ

19.03.1998 - 22.05.2004

ð£óFò üù è†C

15           திரு. இந்தர் குமார் குஜ்ரால்                21.04.1997 - 19.03.1998                ஜனதா தளம்

F¼. Þ‰î˜ °ñ£˜ °xó£™

21.04.1997 - 19.03.1998

üùî£ î÷‹

14           திரு. தேவ கவுடா                01.06.1996 - 21.04.1997                ஜனதா தளம்

F¼. «îõ è¾ì£

01.06.1996 - 21.04.1997

üùî£ î÷‹

13           திரு. அடல் பிகாரி வாஜ்பாய்                16.05.1996 - 01.06.1996                பாரதிய ஜனதாக் கட்சி

F¼. Üì™ Hè£K õ£xð£Œ

16.05.1996 - 01.06.1996

ð£óFò üù è†C

12           திரு. பி.வி நரசிம்ம ராவ்                21.06.1991 - 16.05.1996               காங்கிரஸ் (இந்திரா)

F¼. H.M ïóC‹ñ ó£š

21.06.1991 - 16.05.1996

裃Aóv (Þ‰Fó£)

11           திரு. சந்திர சேகர்                10.11.1990 - 21.06.1991                ஜனதா தளம் (மதச்சார்பற்ற)

F¼. ê‰Fó «êè˜

10.11.1990 - 21.06.1991

üùî£ î÷‹ (ñî„꣘ðŸø)

10           திரு. வி.பி. சிங்                02.12.1989 - 10.11.1990                ஜனதா தளம்

F¼. M.H. Cƒ

02.12.1989 - 10.11.1990

üùî£ î÷‹

9              திரு. ராஜீவ் காந்தி                31.10.1984 - 02.12.1989               காங்கிரஸ் (இந்திரா)

F¼. ó£pš 裉F

31.10.1984 - 02.12.1989

裃Aóv (Þ‰Fó£)

8              திருமதி இந்திரா காந்தி                14.01.1980 - 31.10.1984               காங்கிரஸ் (இந்திரா)

F¼ñF Þ‰Fó£ 裉F

14.01.1980 - 31.10.1984

裃Aóv (Þ‰Fó£)

7              திரு. சரண் சிங்                28.07.1979 - 14.01.1980                ஜனதாக் கட்சி

F¼. êó‡ Cƒ

28.07.1979 - 14.01.1980

üù è†C

6              திரு. மொரார்ஜி தேசாய்                24.03.1977 - 28.07.1979                ஜனதாக் கட்சி

F¼. ªñ£ó£˜T «î꣌

24.03.1977 - 28.07.1979

üù è†C

5              திருமதி இந்திரா காந்தி                24.01.1966 - 24.03.1977               காங்கிரஸ்

F¼ñF Þ‰Fó£ 裉F

24.01.1966 - 24.03.1977

裃Aóv

4              திரு. குல்சாரி லால் நந்தா#                11.01.1966 - 24.01.1966               காங்கிரஸ்

F¼. °™ê£K ô£™ ï‰î£#

11.01.1966 - 24.01.1966

裃Aóv

3              திரு. லால் பகதூர் சாஸ்திரி                09.06.1964 - 11.01.1966               காங்கிரஸ்

F¼. ô£™ ðèɘ ê£vFK

09.06.1964 - 11.01.1966

裃Aóv

2              திரு. குல்சாரி லால் நந்தா#                27.05.1964 - 09.06.1964               காங்கிரஸ்

F¼. °™ê£K ô£™ ï‰î£#

27.05.1964 - 09.06.1964

裃Aóv

1              திரு. ஜவகர்லால் நேரு   ஆகஸ்டு 15 1947 - 27.05.1964               காங்கிரஸ்

F¼. üõè˜ô£™ «ï¼

Ýèv´ 15 1947 - 27.05.1964

裃Aóv

 

# இடைக்காலப் பிரதமர்
பிரதமர் அலுவலகம், பத்திரிகைத் தகவல் அலுவலகம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், ஆகியவற்றின் இணைய தளங்களிலிருந்து கூடுதல் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன.
* சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம்

க.மா.ர/எஸ்.பாலா/லீமா

 

 

 

 
Web Ratana This site is winner of Platinum Icon for 'Outstanding Web Content' Web Ratna Award'09 presented in April 2010

கருத்தும் ஆக்கமும்: கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.
சாஸ்திரி பவன் (தரை தளம்), ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 006. Phone 044-28228146/47/48,28256474
Go Top Top

விதிமுறைகள் Copyright கொள்கை தனி கொள்கை Hyperlinking கொள்கை Terms of Use Copyright Policy Privacy Policy Hyperlinking Policy