தலமையகம் செய்திகள் புகைப்படங்கள் அழைப்பு கட்டுரைகள் கருவூலம் home Home
PIB Delhi Releases Photos Invitations Features Archives
Search உயர்நிலை தேடல்
RSS RSS
Quick Search
home Home
Releases Photos Invitations Features Accreditation Feedback Subscribe Releases Advance Search
                         
  home  Printer friendly Page home  Email this page
 
Special Service

சிறப்பு கட்டுரை

 

 

 

 

  

மக்களின் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

• அர. வித்யா

 

The National Council for Science & Technology Communication (NCSTC) is mandated to communicate science & technology (S&T) to masses, stimulate scientific and technological temper and coordinate & orchestrate such efforts throughout the country

  

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு சிறய கிராமத்தில் அக்டோபர் 15, 1931 ஆம் ஆண்டு டாக்டர் அவுல் பகிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பிறந்தார். ஏழ்மையான, பணிவான குடும்பத்தில் இருந்து வந்த போதிலும் சமூகத்திற்காக அவர் கொண்டிருந்த தொலை நோக்கு பார்வைக்கான பங்களிப்பு குறையவில்லை. மெட்ராஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வானுர்தி பொறியியலை அவர் சிறப்பு பாடமாக எடுத்துப்படித்தார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி கழகத்தில் டாக்டர் கலாம் அறிவியலாளராக சேர்ந்து பணிப்புரிந்து வந்தார். 1969 ஆம் ஆண்டு டாக்டர் கலாம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவர் இந்தியாவின் முதல் செயற்கைகோள் செலுத்து வாகனத்திற்கான திட்ட இயக்குனராக பணிப்புரிந்தார். ஜூலை மாதம் 1980 ஆம் ஆண்டு ரோகினி செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

     அறிவியல் உலகத்திற்கு டாக்டர் கலாமின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அவர் எப்போதுமே தனது சாதனைகள் குறித்து பெருமைபட்டுக் கொண்டதில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணிப்புரிந்து செயற்கைக் கோள் செலுத்து வாகன தொழில்நுட்பத்தில் நிபுணராக விளங்கினார். ஒருங்கிணைந்த வழிகாட்டி ஏவுகனை வளர்ச்சித் திட்டத்தின் தலைமை நிறுவனராக பொறுப்பேற்ற அவர் உள்நாட்டு வழிகாட்டி ஏவுகனை வளர்ச்சித் திட்டத்தை பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் மேம்படுத்தினார். அக்னி, பிருத்வி ஏவுகனை வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்குப் பெறுப்பேற்ற அவர் பல்வேறு நிறுவனத்துடன் இணைந்து மிக முக்கிய தொழில்நுட்ப உள்நாட்டு திறனை உருவாக்கவும் செயலாற்றினார்.

 

     டாக்டர் கலாம் ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி / மேம்பாட்டு துறையின் செயலராகவும் பணியாற்றினார். இந்தியாவின் ஏவுகனை மனிதர் என்று டாக்டா கலாம் அழைக்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

 

     டாக்டர் அப்துல் கலாம் ஜூலை 2002ல் 11வது குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவிற்கான அவரின் தொலைநோக்குப் பார்வையை இளைஞர்களிடமும் முதியவர்களிடமும் அவர் வாழ்க்கை முழுவதும் ஆர்வத்துடன் பகிர்ந்துக் கொண்டார். சமுகத்தை தொழில்நுட்பம் மூலமாக மாற்றி அமைப்பதில் டாக்டர் கலாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மனித நலனுக்காக இந்தியாவின் இளைஞர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஊக்குவித்தார்.

 

     டாக்டர் கலாம் அவர் படைத்த சாதனைகளையும் மீறி அனைவரும் தன்னை ஒரு ஆசிரியராகவே நினைவுக்கூற வேண்டும் என்று விரும்பினார். இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஜூலை 27, 2015 ஆசிரியராக அவர் உரையாற்றிய போதே அவர் உயிர் பிரிந்தது.

 

••••••

• உதவி தகவல் அலுவலர்

  பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

 
Web Ratana This site is winner of Platinum Icon for 'Outstanding Web Content' Web Ratna Award'09 presented in April 2010

கருத்தும் ஆக்கமும்: கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.
சாஸ்திரி பவன் (தரை தளம்), ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 006. Phone 044-28228146/47/48,28256474
Go Top Top

விதிமுறைகள் Copyright கொள்கை தனி கொள்கை Hyperlinking கொள்கை Terms of Use Copyright Policy Privacy Policy Hyperlinking Policy