தலமையகம் செய்திகள் புகைப்படங்கள் அழைப்பு கட்டுரைகள் கருவூலம் home Home
PIB Delhi Releases Photos Invitations Features Archives
Search உயர்நிலை தேடல்
RSS RSS
Quick Search
home Home
Releases Photos Invitations Features Accreditation Feedback Subscribe Releases Advance Search
                         
  home  Printer friendly Page home  Email this page
 
Special Service

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் செய்தியாளர் சந்திப்பின் சிறப்பு அம்சங்கள்

பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்ப்புறம்) – அனைவருக்கும் வீடு இயக்கத்தின் தொடக்கம்

The National Council for Science & Technology Communication (NCSTC) is mandated to communicate science & technology (S&T) to masses, stimulate scientific and technological temper and coordinate & orchestrate such efforts throughout the country

நாட்டில் வீடு இல்லாதவர்களும் குடிசை வீட்டில் வாழ்பவர்களும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதி உள்ள சிமென்ட் வீடுகள்  சொந்தமாக வைத்திருக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் “பிரதமர் வீட்டு வசதி திட்டம் (நகர்புறம்) அனைவருக்கும் வீடு இயக்கம்”, என்ற இயக்கத்தை பிரதமரின் லட்சியம் நகர்புறங்களில் ஈடேறும் வகையில் மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்புறம்) அனைவருக்கும் வீடு இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜூன் 25, 2015 அன்று தொடங்கினார்.

நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள 4,041 சட்டரீதியான நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதை அடுத்து நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள 2,008 நகரங்களில் உள்ள குறைந்த வருமானம் உள்ள சமூகத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு பயனளிக்கும் வகையில் 17,73,533 குறைந்த செலவிலான வீடுகள் கட்டுவதற்கான நிதி ஓதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு  யூனியன் பிரதேசங்களில் மட்டும் தான் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இதுவரை எந்த திட்டமும் முன்மொழியப்படவில்லை.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமே குறைந்த வருமானம் உள்ள சமூகத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு பயனளிப்பதே.

டிசம்பர் 31, 2016 ஆம் நாள் பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை (நகர்புறம்) நடுத்தர வருமான சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தினார்.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் 2011 ஆம் ஆண்டு தொழில்நுட்பம் குழுவை நியமித்தது. இந்த குழு வீட்டுவசதி பற்றாக்குறையின் எண்ணிக்கை 1.878 கோடி என்று மதிப்பீடு செய்துள்ளது. சரி செய்ய முடியாத நிலையில் உள்ள 9.9 லட்ச குடிசை வீடுகள், 22.7 லட்ச  பயனற்று வீடுகள், 1.499 கோடி புது வீடு தேவைப்படும் மிக நெருக்கமாக அமைந்துள்ள இடர்பாடுள்ள வீடுகள்,  வீடற்ற 5.3 லட்ச நகர்புற நகரங்கள் ஆகியை இதில் அடங்கும். மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்குதலை கருத்தில் கொண்டு பார்த்தால், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்புறம்) செயல்படுத்த துவங்கும்போது நகர்புறங்களில் தேவைப்படும் வீடுகளின் எண்ணிக்கையில் 2.00 கோடி வீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை அடுத்து, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தேவைப்படும் வீடுகள் குறித்து புதிய மதிப்பீடு செய்யும்மாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. இந்த மதிப்பீடு விரைவில் முடிவடைய உள்ளது.

பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்புறம்) - அனைவருக்கும் வீடு இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:

ரூ. 3.00 லட்சத்தை ஆண்டு வருமானமாக கொண்ட பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்கள், ஆண்டு வருமானம் ரூ. 3.00 முதல் ரூ. 6.00 லட்சம் வரை உள்ள குறைந்த வருமான சமூகத்தினர், ஆண்டு வருமானம் ரூ. 6.00 முதல் ரூ. 12.00 லட்சம் வரை உள்ள நடுத்தர வருமான சமூகத்தினர் (1) மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 12.00 முதல் ரூ. 18.00 லட்சம் வரை உள்ள நடுத்தர வருமான சமூகத்தினர் இத்திட்டத்தின் பயனாளிகள்.

இந்திய நாட்டின் நிலைமையில் உச்சகட்ட வருமான வரம்பு ரூ. 18.00 லட்சம் என்பது மிகவும் கணிசமானது. இதனால், இந்திய சமூகத்தின் பெரும்பாலானோர் பிரதமர் வீட்டு வசதி திட்டம் (நகர்புறம்) - அனைவருக்கும் வீடு இயக்கத்தின் கீழ் பயனடைவர். “அனைவரும் இணைவோம் – அனைவரும் உயர்வோம்” என்ற மத்திய அரசின் வளர்ச்சி கொள்கை வரிசையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்புறம்) கீழ் மத்திய அரசின் உதவி -:

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்புறம்) - அனைவருக்கும் வீடு இயக்கத்திற்கு ஜூன் 17, 2017 அன்று ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின் பல்வேறு கூறுகளில் அடிப்படையில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ. 1.00 லட்சம் முதல் ரூ. 2.40 லட்சம் வரை மத்திய அரசின் உதவி தொகை கீழ்கண்ட அடிப்படையில் வழங்கப்படும்.

1.   அதே இடத்தில் குடிசைபகுதி மறுசீரமைப்பு:

இந்த பிரிவின் கீழ், குடிசைபகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும். அதாவது, இதன் அடிப்படையில், அதே இடத்தில் நிலத்தை ஆதாரமாக கொண்டு வீடுகள் கட்டப்படும். இதில் குடிசைப்பகுதியில் உள்ளவர்கள் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட பல அடுக்கு கட்டிடங்களில் சிமென்ட் வீடுகளை இலவசமாக பெற முடியும். இந்த பிரிவில் ரூ.1.00 லட்சம் மத்திய அரசின் உதவி தொகையாக வழங்கப்படும்.

2.   பங்குதாரர் முறையில் குறைந்து செலவிலான வீடு:

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மத்திய அரசின் உதவித் தொகையாக வழங்கப்படும். ஒவ்வொரு திட்டத்திலும் 35 சதவீதம், குறைந்தபட்சம் 250 வீடுகள்,   பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டால் மாநில/யூனியன் பிரதேசங்கள்/நகரங்கள்/தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வீடுகள் கட்டப்பட வேண்டும்.

3.   பயனாளியின் தலைமையில் கட்டுமானம்:

நலிவுற்ற பிரிவினை சேர்ந்த பயனாளிகள் தாமு புதிய வீட்டை கட்டவும், ஏற்கனவே உள்ள வீட்டை புதுப்பிக்கவும் மத்திய அரசின் உதவி தொகையாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும்.

4.   கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம்

              பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள  சமூகத்தினர் புது வீடு கட்டவும் அல்லது ஏற்கனவே உள்ள வீட்டில் புதிய அறை, சமையல் அறை, கழிவறை உள்ளிட்டவையை கட்டி இணைக்கவும் மத்திய அரசின் உதவி தொகை, வீட்டு கடனின் வட்டித் தொகை மானியமாக கொடுக்கப்படும்.

           பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்கள் மற்றும் குறைந்த வருமானமுள்ள  சமூகத்தினர் ரூ. 6.00 லட்சம் மதிப்பிலான 20 ஆண்டு கால வீட்டு கடனிற்கு 6.50 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். ரூ. 6.00 லட்சம் முதல் ரூ. 12.00 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட மத்திய வருமான சமூகத்தினருக்கு  ரூ. 9.00 லட்சம் மதிப்பிலான 20 ஆண்டு கால வீட்டு கடனிற்கு 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், ரூ. 12.00 லட்சம் முதல் ரூ. 18.00 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட மத்திய வருமான சமூகத்தினருக்கு  ரூ. 9.00 லட்சம் மதிப்பிலான 20 ஆண்டு கால வீட்டு கடனிற்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். ரூ.2.30 லட்சம் முதல் ரூ. 2.40 லட்சம் வரை வரும் இந்த மானியம் பயனாளிகளின் மாதாந்திர தவணைச் சுமையை குறைக்க முன்பணமாக கொடுக்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்கள் மற்றும் குறைந்த வருமான சமூக பிரிவினர்களுக்கு கட்டப்படும் வீடுகள், குடும்பத்தில் வயதுவந்த பெண் உறுப்பினர் பெயரிலோ அல்லது குடும்பத்தில் வயதுவந்த பெண் மற்றும் ஆண் உறுப்பினர் பேரில் இணைந்தோ இருக்க வேண்டும்.

கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தின் கீழ் மத்திய வருமான சமூகத்தினருக்கு கட்டப்படும் வீடுகள், குடும்பத்தில் வயதுவந்த வருவாய் ஈட்டும் உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். அவர் திருமணம் ஆகாதவராகவும் இருக்கலாம்.

குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டம் ஸ்மார்ட் நகரங்கள் இயக்கத்தின் கீழும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கான சில திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

அதிகரித்துவரும் வீட்டு கட்டுமானத்தின் விளைவு:

     கட்டுமானத் துறை நாட்டில் அதிகப்படியான வேலைவாய்ப்பை தரும் துறைகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 250 துணைத் தொழில்களுக்கு இது துணை புரிவதோடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை அளிக்கவல்லது. இந்த துறையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறைந்த செலவில் வீட்டுவசதி செய்துதரும் பிரிவிற்கு “உள்கட்டமைப்பு அந்தஸ்து” வழங்குதல், 20-க்கும் மேலான சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை, குறைந்த விலையில் வீடுகட்டும் திட்டங்களில் பெறப்படும் லாபத்திற்கு வருமான வரி விளக்கு, ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு) சட்டம், 2016 முதலியன ஆகியவை இந்த துறையை ஊக்குவித்து கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்ப்புறம்) – அனைவருக்கும் வீட்டு வசதி இயக்கத்தை திறனுடன் செயல்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள்:

குறைந்த செலவில் வீட்டு வசதி செய்து கொடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 2017-18 பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் இத்துறைக்கு குறைந்த வட்டியிலான கடன் அதிகப்படியாக கிடைக்கும்.

2004-14 – ஆம் ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் வீட்டு வசதி திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு மத்திய அரசு அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை நடுவர் திட்டங்களை உருவாக்கவும் / திருத்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. குறைந்த செலவிலான வீடு கட்டுவதற்கான கட்டிட அமைப்பு மற்றும் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர ஒப்புதல், குடியிருப்பு பகுதிகள் என்று ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் நிலங்கள் இருத்தல், விளைநிலம் அல்லாத நிலம் என்ற அனுமதி தனிச் சான்றிதழாக வழங்கப்பட வேண்டிய அவசியத்தை நீக்கல், குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்டங்களுக்கு அதிகப்படியான நிலப்பகுதி விகிதம் நில இடைவெளிக் குறியீடு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைகள் போன்றவை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.

பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்ப்புறம்) நகர்ப்புறத்தின் வளர்ச்சி அறிக்கை – 2004-14 ஆண்டுடனான ஒப்பீடு:

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இத் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் 2,008 நகரங்களில் உள்ள ஏழை மக்களுக்காக 17,73,533 குறைந்த செலவு வீடுகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 939 நகரங்களில் 10 வருடங்களில் அதாவது 2004-14 வரை ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 13,82,768 வீடுகள் மற்றும் ராஜீவ் வீட்டு வசதித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 3,90,765 வீடுகளை விட அதிகமாகும்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் இதுவரை ரூ. 96,266 கோடி மதிப்பிலான முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது 2004-14 ஆண்டுக்காலங்களில் செய்யப்பட்ட ரூ. 31,000 கோடி அளவிலான முதலீட்டை விட அதிகமாகும்.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் இதுவரை ரூ. 27,883 கோடி நிதி மத்திய அரசின் உதவித் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவே 2004-14 – ல் ரூ. 20,920 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் மட்டுமே மத்திய அரசின் சார்பில் அதிகப்படியான உதவித் தொகை அதாவது ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. 1,00,000 ரூ. 2.40 லட்சம் வரை அளிக்கப்படுகிறது.

2014-17 – ல் 3.55 லட்சம் குறைந்த செலவிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் 2004-14 ஆகிய 10 ஆண்டுகளில் 7.99 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.

குறைந்த செலவிலான வீட்டு வசதித்திட்டம் 2004-14 ஆகிய 10 ஆண்டுகளை விட கடந்த 3 ஆண்டுகளில் அதிக கவனமும் செயல்திறனும் பெற்றுள்ளது என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் நிரூபிக்கிறது.

 

 

 

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்றுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட குறைந்த செலவிலான வீடுகளின் விவரங்கள் – முதலீடு மற்றும் மத்திய அரசின் உதவியுடன்

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்

பிரதமர் வீட்டு வசதித்திட்டத்தின் (நகர்ப்புறம் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை

ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலீடு

(ரூ.கோடி)

ஒப்புதல் அளிக்கப்பட்ட மத்திய அரசின் உதவித் தொகை (ரூ.கோடி)

ஆந்திரப் பிரதேசம்

1,95,047

10,697

2,954

பீகார்

88,293

3,909

1,453

சத்திஸ்கர்

30,075

2,760

445

கோவா

11

1.12

0.22

குஜராத்

1,44,687

9,581

2,025

அரியானா

4,299

338

224

இமாசலப் பிரதேசம்

4,890

222

96

ஜம்மு காஷ்மீர்

6,243

292

104

ஜார்கண்ட்

64,567

2,411

1,007

கர்நாடகா

1,46,548

6,288

2,492

கேரளா

28,275

943

451

மத்தியப் பிரதேசம்

2,09,711

15,572

3,247

மகாராஷ்ட்ரா

1,26,081

13,458

1,915

ஒடிசா

48,855

2,108

824

பஞ்சாப்

42,681

1,199

600

ராஜஸ்தான்

37,856

2,646

685

தமிழ்நாடு

2,27,956

8,279

3,482

உத்தரப் பிரதேசம்

20,682

1,056

466

உத்தராகண்ட்

7,904

510

201

மேற்கு வங்காளம்

1,44,369

5,870

2,175

 

 

 

 

வடகிழக்கு மாநிலங்கள்

 

 

 

அருணாச்சலப் பிரதேசம்

1,606

98

78

அசாம்

24,353

730

365

மணிப்பூர்

9,748

257

146

மேகாலயா

48

2.52

0.72

மிசோரம்

10,549

219

164

நாகாலாந்து

13,560

335

229

சிக்கிம்

1

0.10

0.02

திரிபுரா

45,908

1,264

721

 

 

 

 

யூனியன் பிரதேசம்

 

 

 

சண்டிகர்

5

0.64

0.10

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

854

32

13

டாமன் மற்றும் டையூ

51

2

0.78

தில்லி

237

23

3.52

புதுச்சேரி

3,862

163

58

***

 
Web Ratana This site is winner of Platinum Icon for 'Outstanding Web Content' Web Ratna Award'09 presented in April 2010

கருத்தும் ஆக்கமும்: கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.
சாஸ்திரி பவன் (தரை தளம்), ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 006. Phone 044-28228146/47/48,28256474
Go Top Top

விதிமுறைகள் Copyright கொள்கை தனி கொள்கை Hyperlinking கொள்கை Terms of Use Copyright Policy Privacy Policy Hyperlinking Policy